Skip to content

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்…தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்க வாய்ப்பு…

நாடு முழுவதும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தலைமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ள பீஹாரில் அண்மையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து முடிந்தது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என்று சென்னை ஐகோர்ட்டில் தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்து இருந்தது.
இத்தகைய சூழலில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். டெல்லியில் நாளை மாலை 4.15 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கு இந்த வழக்கானது, தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் வாதிடும் போது, “தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் ஒரு வாரத்தில் தொடங்கும் என்றும், மனுதாரரின் குறை, அதன் மூலம் தீர்க்கப்படும் என்றும் கூறினார். இதை குறித்துக் கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்து இருந்தனர்.

error: Content is protected !!