Skip to content

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்-விண்ணப்பங்கள் விநியோகம்

  • by Authour

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 117 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு நிலை அலுவலரும், அவருடன் இரண்டு தன்னார்வலர்களும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 9,351 பேர் சிறப்பு தீவிர கணக்கெடுப்பு பணிகளிலும் 650 பேர் சட்டசபை தொகுதி வாரியாக அலுவல் பணிகளிலும் 10,000 பேர் தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் நேரில் சென்று ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளாக பார்வையிட்டு ஆய்வு நடத்தி அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி பகுதியில் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொள்ளிடம் காவல் நிலைய ஆய்வாளர் வீரபாண்டி மற்றும் காவலர்கள் உடன் இணைந்து லால்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அப்போது அவ்வழியாக வந்த டாட்டா இன்டிகா காரை நிறுத்தி சோதனை செய்தபோது அந்த காரில் 75 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது இது குறித்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த லால்குடி கொபாவளி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் சிவாஜி ராஜா என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் வாகன சோதனையின் போது குட்காவை பறிமுதல் செய்த கொள்ளிடம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் வெகுவாக பாராட்டியுள்ளார்.

error: Content is protected !!