மதுரையில் இருந்து 160 பயணிகள் மற்றும் ஏழு ஊழியர்களுடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் துபாய்க்கு கிளம்பி பயணித்தது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் எந்த காயமும் இன்றி பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறுக்கு என்ன காரணம் என்பதை கண்டறியும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையிலிருந்து துபாய்க்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கம்
- by Authour

