இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த அக்டோபர் 9-ந் தேதியன்று 47 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். நவம்பர் 3-ந் தேதியன்று நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும் என மொத்தம் 35 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தி வந்தார்.
இந்தநிலையில் ராமேஸ்வரம் அருகே ஒரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 மீனவர்களை எல்லை தாண்டி கடையை கடல் மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 14 மீனவர்களும் இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் உள்ள விசாரணை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

