Skip to content

தமிழக மீன்வர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 14 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 14 பேர்  கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். தமிழக மீனவர்கள் 14 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்  பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளைடித்தனர். பாதிக்கப்பட்ட 14 மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களின் தொடர் தாக்குதலை கண்டித்து, நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.  இரும்பு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கொடூரமாக தாக்கியதாக காயமடைந்த மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  இலங்கை கடற்கொள்ளையர்களை கண்டித்து, செருதூர், வெள்ளப்பள்ளம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!