இலங்கை வாலிபர் தற்கொலை…
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் ஜெயசீலன் (வயது 29) பந்தல் தொழிலாளி.இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார் இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஜெயசீலனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த ஜெயசீலனின் மனைவி பாண்டிச்சேரிக்கு சென்று விட்டார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட ஜெயசீலன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அவரது தாய் கேகே நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து கேகே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய ஜெயசீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
முதியவர் திடீர் சாவு.. போலீசார் விசாரணை
திருச்சி பாரதிதாசன் சாலை யில்தனியார் மருத்துவமனை எதிரில் உள்ள பஸ் நிறுத்தத்தில்நின்று கொண்டிருந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி நிலையில் கிடந்தார், இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முதியவர்ரை அழைத்துக் கொண்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இறந்த முதியவரின் பெயர் அழகர்சாமி (வயது 60 )என்பது மட்டும் தெரிய வந்தது .அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து முழு விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து கோ- அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் கௌதம் பாபு கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அழகர்சாமி இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் கண்டக்டரின் மனைவி மாயம்..
திருச்சி உறையூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 22) மோகன் திருச்சியில் உள்ள தனியார் பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் மோகன் தனதுமாமியாரிடம் ரூபாய் இரண்டு லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது இந்நிலையில் சம்பவத்தன்று மனைவி முத்துலட்சுமி ரூபாய் 2 ஆயிரம் பணத்தை மோகனிடம் கேட்டதாக தெரிகிறது.அதற்கு அவர் மறுத்ததன் காரணமாக கடந்த 10 ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது கணவர் மோகன் உறையூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
