தரகம்பட்டி அருகே மாவத்தூர் ஊராட்சி ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஏழுமலையான் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தரகம்பட்டி அருகே மாவத்தூ ஊராட்சி பசுபதிபாளையம் குலதெய்வங்களான ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஏழுமலையான் ஆகிய சாமிகளுக்கு தனித்தனியாக
கோயில்கள் அமைந்து உள்ளது. இக்கோயில் ஆவணி மாத திருவிழா நடத்த ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள், பசுவை இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்தனர்.
இந்த மாதம் ஆவணி 17,18,19ம் தேதி பக்தர்கள் விரதம் மேற்கொண்டு அனைத்து சாமிகளுக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து வழி பட்டு வந்தனர். மாயனூர் செல்லாண்டியம் மன் படித்துறையில் தீர்த் தம் எடுத்து வந்தனர். பின்னர் கோயில் வீட்டிலிருந்து பூஜை கூடைகள் எடுத்து வரப்பட்டது. 2வது நாள் பொங்கல் வைத்து, மாரியம்மனுக்கு கிடா வெட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
பின்னர் அனைத்து சாமிகளுக்கும் விடையாற்றி நிகழ்ச்சி நடத்தி திருவிழா நிறைவு பெற்றது. இந்த திருவிழாவில் பசுபதிபாளையம், கடவூர்,சேவாப்பூர் அய்யம்பாளையம், வீரசிங்கம்பட்டி, இடையபட்டி, கீரனூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து பின்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.