Skip to content

ஸ்ரீரங்கம் பகல் பத்து 5ம் நாள்..நம்பெருமாள் வைரக்கல் ரங்கூன் அட்டிகையுடன் சேவை

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா
பகல் பத்து ஐந்தாம் திருநாள் அர்ஜுன மண்டபத்தில் திருமாலை பிரபந்தம் செவிமடுக்க சௌரிக் கொண்டை சாற்றி ; அதில் புஜ கீர்த்தி; இரு வெள்ளை கல் வில்வ பத்ர பதக்கம்; முத்து பட்டை ; முல்லை பூ சரம் சுற்றி ; வைர‌அபய ஹஸ்தம் சாற்

றி; அதில் தங்க கோலக்கிளி எடுத்து ; கீழே தொங்கல் பதக்கம் ஆட ; திருமார்பில் – ஸ்ரீ ரங்க விமான பதக்கம்; கல் இழைத்த ஒட்டியாணம் ; அதன் கீழே சிகப்பு கல் சூர்ய பதக்கம்: அதன் கீழ் வரிசையாக வெள்ளைகல் அடுக்கு பதக்கங்கள்; காசு மாலை; 8 வட முத்து மாலை, “அரைச் சிவந்த ஆடையின் மேல்” என்ற அமலனாதிபிரான் பாசுரத்திற்கு ஏற்ப சிவப்பு நிற பட்டு அணிந்து பின் சேவையாக – சிகப்புக் கல் பதக்கம்; காசு மாலை ; வைரக்கல் ரங்கூன் அட்டிகை அணிந்து சேவை சாதித்தார்.

error: Content is protected !!