Skip to content

ஸ்ரீரங்கம் பகல் பத்து 10ம் நாள்.. நம்பெருமாள் மோகினி அலங்காரத்துடன் காட்சி

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 10 ஆம் நாள் உற்சவம் – நம்பெருமாள் மோகினி அலங்காரம், மற்றும் பல்வேறு ஆபரணங்கள் அணிந்து காட்சியளித்தார்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. பகல் பத்து, ராப்பத்து என நடைபெறும் வைகுண்ட ஏகாதேசி விழாவின் பகல் பத்து 10- ஆம் நாள் இன்று உற்சவர் நம்பெருமாள் சௌரிக் சாயக் கொண்டை சாற்றி, அதில் கலிங்கத்துராய், சூர்ய – சந்திர வில்லை, சிகப்பு கல் நெற்றி பட்டை, முத்து பட்டையை பக்க வாட்டில் கொண்டையில் அணிந்து காதில் வைர மாட்டல் – தோடு – ஜிமிக்கி , வலது திருமூக்கில் மூக்குத்தி அணிந்து, திருமேனியில் பங்குனி உத்திர பதக்கம், தாயார் வைரத்திருமாங்ஙல்யம்,
தொங்கல் பதக்கம், வரிசையாக அடுக்கு பதக்கங்கள், பெரிய பவழ மாலை, காசு மாலை,2 வட‌முத்து மாலை, வலது திருக்கையில் – தங்க கோலக்கிளி, இடது திருக்கையில் – வரிசையாக வில்வ பத்ரம், தாயத்து சரங்கள், வளையல், பவழ கடிப்பு , வில்வ பத்ர தொங்கல் சாற்றி,திருவடியில் – சதங்கை ,

தண்டை அணிந்து, பின் சேவையாக – பின்னல் ஜடை – அதன்மேல் ஜடை தாண்டா; திருமுடியில் கல் இழைத்த ராக்கொடி, ஜடைக்கு மேல் – நாகம் வைத்த கல் இழைத்த ஜடை தாண்டா; புஜ கீர்த்தி; கச்சு எடுத்து கட்டி – அதில் அரைச் சலங்கை தொங்க விட்டுக் கொண்டு, ரங்கூன் அட்டிகை, ஒட்டியாணம் அணிந்து, வெண் பட்டு அணிந்து – வலது திருவடியை மடித்து அமர்ந்தும்- இடது திருவடியை , திருக்கை தாங்க அமர்ந்தும் அதி அற்புதமாக நாச்சியாரக சேவை சாத்திக்கிறார். பின்பு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ஜீன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு

காட்சியளித்தார். இன்று பகல் முழுவதும் அர்ஜீன மண்டபத்தில் இருக்கும் நம்பெருமாளை ஏராளமான பக்தர்கள வழிபட்டு செல்கின்றனர். நம்பெருமாள் இரவு மீண்டும் மூலஸ்தானம் சென்றடைவார்.

விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நாளை 30 ஆம் தேதி விமர்சையாக நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

மேலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வளாகம் சுற்றிலும் தற்காலிக சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு எந்த விதமான ஒரு அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் இருப்பதற்காக

காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக சொர்க்கவாசல் திறப்பு அன்று இலட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது அன்றைய தினம் கூடுதல் பாதுகாப்பில் போலீசார் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!