ஸ்ரீரங்கம் வடபத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வட காவிரி என அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து 1008 தீர்த்த குடம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது
ஸ்ரீரங்கம் வடக்கு வாசலில் வடபத்ர காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது கடந்த சில மாதங்களாக கோவில் முழுவதும் புனரமைக்கப்பட்டு புதிய கோபுரங்கள் கட்டும் பணி நடைபெற்றது .அதன் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அதற்கான கும்பாபிஷேக விழா வருகின்ற 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது..
கும்பாபிஷேக விழாவிற்காக திருமஞ்சனம் எனப்படும் 1008 தீர்த்த குடம் வட காவேரி என அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து இன்று காலை மேள தாளம்
முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பெரிய குடம் யானை மீது வைத்தும் மற்ற குடங்கள் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் ஊர்வலமாக நான்கு அடையவளஞ்சான் வீதிகளையும் வலம் வந்து திருக்கோவிலை வந்தடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை முதல் கால யாக சாலை பூஜை தொடங்குகிறது. நாளை 2 மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜை 19ஆம் தேதி அன்று நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்று அன்றைய தினம் கால 8 மணி முதல் ஒன்பது மணிக்குள் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது.