Skip to content

அயோத்தி கோவிலுக்கு பட்டு வஸ்திரங்கள் … ஸ்ரீரங்கம் பட்டர்கள் பிரதமரிடம் வழங்கினர்…

108 வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலுக்கு பிரதமர் மோடி இன்று காலை வருகை தந்தார். அவருக்கு முதலில் சுந்தர் பட்டர் பூரண கும்ப மரியாதை அளித்தார். பின்னர் அனைத்து சந்நிதிகளுக்கும்  சென்று  வழிபட்டார். 1 மணி நேரம் 40 நிமிடம் வழிபாடு நடத்திவிட்டு புறப்பட்ட பிரதமர்  மோடி   கோவில் பட்டர்களுக்கு நன்றி  தெரிவித்தார். அப்போது பட்டா்கள் சார்பில் பிரதமரிடம்   அயோத்தி ராமர்

கோயிலுக்கு பட்டு வஸ்திரங்கள்  வழங்கப்பட்டது.   அந்த பட்டு வஸ்திரங்களை  பட்டர்கள் சார்பில் நந்து பட்டர் பிரதமரிடம் வழங்கினார்.  அதைப்பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி மீண்டும் பட்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!