ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெருவைச் சேர்ந்தவர் அன்பு (எ) அன்பரசன் (33), குற்ற பதிவேடு குற்றவாளி. பைனாஸ் தொழில் நடத்தி வந்தார். இவர் நேற்று மேலவாசல், மாநகராட்சி கழிப்பறை வழியாக உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அன்பரசனை வழிமறித்து அரிவாளால் தலை, நெஞ்சு, கைகள் மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.
அந்த பகுதியில் இருந்தவர்கள் அன்பரசனை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அன்பு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு, கோபால் சாமி தோட்டத்தைச் சேர்ந்த தினேஷ் பாபு (28), சென்னை, ராயபுரம், காசிமேட்டைச் சேர்ந்த லோகேஷ் (23), ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் 2வது தெருவைச் சேர்ந்த மகாபிரபு (23), ஸ்ரீரங்கம் மேலுார், கொள்ளிடக்கரையைச் சேர்ந்த அய்யனார் (22), திருவானைக்கோவில் வடக்கு உள்வீதியைச் சேர்ந்த ரகுபதி (22) மற்றும் ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (23) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொலை செய்ய பயன்படுத்திய 3 அரிவாள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சேவல் சண்டையில் ஏற்பட்ட முன்விரோதம் மற்றும் கபடிபோட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது என 6 பேரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.