Skip to content

ஸ்ரீரங்கத்தில் வாலிபர் வெட்டிக்கொலை- 6 பேருக்கு வலை

  • by Authour

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பை சேர்ந்தவர்  அன்பு என்கிற அன்புராஜ்(28),  இவர் மீது  பல குற்ற வழக்குகள் உள்ளது.  இன்று காலை அவர்  டூவீலரில் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.  வாகன நிறுத்துமிடம் அருகே வந்தபோது   6 பேர் குண்ட கும்பல் அன்புராஜை  வழிமறித்து சரமாரியாக வெட்டியது.

தப்பி ஓட  முயன்ற அன்புராஜை விரட்டிச்சென்று வெட்டினர். கையால் வெட்டுகளை தடுத்தார்.  பின்னர் கழுத்திலும் வெட்டு விழுந்தது. இதனால் நிலைகுலைந்த அன்புராஜ்  சரிந்து

விழுந்தார். உடனடியாக ஸ்ரீரங்கம் போலீசார் அங்கு வந்து அன்புராஜை  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக  டாக்டர்கள் தெரிவித்தனர்.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இந்த கொலை நடந்தது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல்  அறிந்த உறவினர்கள் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே நடந்த கோழிசண்டையில் ஏற்பட்ட முன் விரோதம்,  ஸ்ரீரங்கம் கோவில் வேடுபறி நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் ஆகிய காரணங்களால் இந்த கொலை நடந்திருக்கலாம் என  கூறப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் ஸ்ரீரங்கத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

error: Content is protected !!