சென்னையில் இருந்து நாளை காலை விமானம் மூலம் கோவை செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருப்பூர் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், வேலம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து மடத்துக்குளம் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.
முன்னதாக திருப்பூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய இடங்களில் முதல்வர் ரோடு ஷோ நடத்துகிறார். அடுத்த நாள் உடுமலை பேருந்து நிலையம் அருகே பெரியார், அண்ணா, கருணாநிதி, அம்பேத்கர் சிலைகளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து நேதாஜி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
பின்னர், பொள்ளாச்சி செல்லும் முதலமைச்சர், அங்கு புதிய கட்டடங்கள் மற்றும் காமராஜரின் சிலையை திறந்து வைக்கிறார். இதனையடுத்து அன்றைய தினம் மாலை கோவையில் இருந்து விமான மூலம் சென்னைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்புகிறார்.