Skip to content

சுந்தரா டிராவல்ஸ் பழனிசாமி சொல்வதெல்லாம் பொய்- முதல்வர் ஸ்டாலின் தாக்கு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில்  பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

இந்த  மாவட்டத்தின் மருமகன் என்ற உரிமையோடு,  உங்களில் ஒருவனாக வந்திருக்கிறேன். 54ஆயிரத்து  461 பேருக்கு  இங்கு நலத்திட்ட உதவிகள் வழங்க இருக்கிறேன்.   புதுக்கோட்டை சொந்த மாவட்டமாக இருந்தாலும்,   அமைச்சர் மெய்யநாதன் இந்த  மாவட்டத்துக்காரர் போல  உழைக்கிறார்.

மயிலாடுதுறை நகரில் நேற்று  நடந்து சென்று மக்களை சந்தித்தேன் அப்போது மழை வந்தது. அதையும் பொருட்படுத்தாமல்,  மக்கள் அன்புமழை பொழிந்தனர்.  அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி என்பது தான் திராவிட மாடல் அரசின் இலக்கு.  கடந்த 4 ஆண்டில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 7 ஆயிரத்து 420 கோடியில் 6 ஆயிரம் வளர்ச்சி பணிகளை செய்துள்ளோம்.

இந்த மாவட்டத்தில் 1லட்சத்து  64 ஆயிரம் பேர் கலைஞர் உரிமைத் தொகை பெற்று வருகிறார்கள்.50,689  மாணவர்கள் காலை உணவு சாப்பிடுகிறார்கள். 5 ஆயிரம் மாணவர்கள் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் பயன்பெறுகிறார்கள்.  10 ஆயிரம் பேர் வீட்டுமனை பட்டாக்கள் பெற்றுள்ளனர். இப்படி ஒவ்வொருக்கும் என்ன தேவை என்பதை பார்த்து பார்த்து செய்கிறோம். மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலை நாட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கச்சத்தீவை மீட்கவேண்டும் என பிரதமரிடம   பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறேன். நம்முடைய  மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.  கச்சத்தீவை தாரை வார்த்தது யார் என்று அவர்கள் அரசியல் செய்கிறார்கள். 11 ஆண்டுகளாக  பாஜக ஆட்சி செய்கிறது.  கச்சத்தீவை மீட்க அவர்கள் செய்த நடவடிக்கை என்ன. மீனவர்கள் கைது  செய்யப்படுவதை தடுக்க வேண்டும்.  கச்சதீவை விட்டுத்தர மாட்டோம் என இலங்கை வெளியுறவு அமைச்சர்  கூறி உள்ளார். இதற்கு   நமது வெளியுறவு  அமைச்சர் ஜெய்சங்கர் எந்த நடவடிக்கையும் எடுக்கவிலை்லை.   மீனவர்களுக்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும். இதை மீனவர்களுக்கு நான் உறுதியாக  சொல்கிறேன்.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சில புதிய திட்டங்களை அறிவிக்கிறேன்.

மயிலாடுதுறை பகுதியில்  நீடுர் ஊராட்சியில் 85 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைப்பு

தரங்கம்பாடி சாலை  ரூ.45 கோடியில் இருவழிச்சாலையாக மாற்றப்படும்.

குத்தாலம் வாய்க்கால் புனரமைக்கப்பட்டு  ரூ.7 கோடியில் மேம்படுத்தப்படும்.

தரங்கம்பாடி வாழக்கோட்டை  பாலம் மேம்படுத்தப்படும்.

சீர்காழிக்கு ரூ-5 கோடியில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்படும்.

பூம்புகார் மீன்பிடி துறைமுகம் தூர்வாரப்படும்.

இந்த அறிவிப்புகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.

கலைஞர்  மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பழனிசாமியால் தாங்கி  கொள்ளமுடியவில்லை.   என் குடும்பம் தமிழ்நாடு தான்.  கட்சி பாகுபாடின்றி எல்லோரையும் ஒரே குடும்பமாக பார்க்கிறேன். அவர்களுடன் தான் என்றும்  நான் நிற்பேன். ‘

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்காக வீடு வீடாக போகிறோம்.  மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்களுக்கு வீடு வீடாக செல்கிறேன்.   தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். திமுக ஆயிரம் ரூபாய்  தராது என்று தேர்தல் நேரத்தில்  அவதூறு  பரப்பினார் பழனிசாமி. செய்வததைத்தான் சொல்வோம் என  தேர்தலின்போது கூறினோம்.  இப்போது மாதம  தவறாமல் பணம்   பெண்களுக்கு செல்கிறது.

இதுபோல  பயனுள்ள பல திட்டங்களை  திமுகவால் சொல்லமுடியும்.  மாணவர் லேப்டாப் திட்டத்தை நிறுத்தியவர் எடப்பாடி,   மூவலூர்  ராமாமிர்தம்  அமம்மையார் திருமண திட்டதை  நிறுத்தினார். 10 தோல்வி பழனிசாமி அவர்களே தொடர்ச்சியாக  தமிழக மக்கள்  உங்களுக்கு டாட்டா காட்டி வருகிறார்கள். இந்த தேர்தலிலும் உங்களுக்கு  மக்கள் டாடா காட்டி விடுவார்கள்.  சுந்தரா டிராவல்ஸ்  படத்தில் வருவது போல பஸ்சை எடுத்துக்கொண்டு   இப்போது கிளம்பி உள்ளார்.  அவரது வாயில் இருந்து வருவெதல்லாம் பொய். பொய் மட்டுமே. பஸ்சில் இருந்து புகை வருவது போல எடப்பாடி வாயில் இருந்து பொய் வருகிறது.

ஆயிரம் ரூபாய்க்கு ஏமாந்து விட்டீர்களே என்று இப்போது சொல்கிறார்.  மக்கள் ஏமாறவில்லை. பாஜகவை நம்பி நீங்கள்  தான் ஏமாந்தீர்கள்,  உங்கள் குடும்பத்தினர் கைது ஆகாமல் இருக்க 4 கார்கள் மாறி  டெல்லியில் போய் அமித்ஷா வீட்டு கதவை தட்டினீர்கள். யாருக்காக தட்டனீர்கள். உங்கள் குடும்பத்தை காக்க தட்டினீர்கள்.

டெல்லியனி் சதுரங்க வேட்டையில் சிக்கி,  உங்கள் குடும்பத்தை காப்பாற்ற    கட்சியை  டெல்லியில் அடமானம் வைத்து விட்டீர்கள். மக்ககளை பொறுத்தவரை ஸ்டாலின் கையில் தமிழகம் பாதுகாப்பாக  இருக்கட்டும் என வாக்களித்தனர். அந்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன். வளர்ச்சியில் தமிழகம் முதலிடம்  உறுதியோடு சொல்கிறேன். அடுத்தும்  அமையப்போவது திமுக ஆட்சி தான். இந்தியாவில் தலை சிறந்த ஆட்சியாக அந்த ஆட்சியும் அமையும்.   அதற்கு நீங்கள் அனைவரும் எங்களுக்கு துணையாக இருக்கவேண்டும்.  2026 தேர்தலிலும் பழனிசாமிக்கு  தமிழக மக்கள் நிரந்தரமாக   பை….பை  சொல்வார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

 

error: Content is protected !!