ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுக உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார். இதன்படி அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏக்கள் வீடு வீடாக சென்று திமுகவில் உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்கள்.
நேற்று திருவாரூர் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், இரவில் திருவாரூர் சன்னதி வீதியில் உள்ள இல்லத்தில் தங்கி இருந்தார். இன்று காலை அவர் சன்னதி வீதியில் உள்ள சில வீடுகளுக்கு சென்று திமுக உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டார். அந்த வீடுகளில் வெகுநேரம் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அந்த குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டிஆர்பிராஜா, மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர். நேற்று திருவாரூரில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்த முதல்வர், வீதிவீதியாக சென்று மக்களிடம் மனுக்கள் பெற்றார்.