கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி சமுதாய மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. 1 முதல் 7 வார்டு பகுதிகளுக்கு நடைபெற்ற முகாம் வருவாய் துறை, மின்சாரம், மாற்றுதிறனாளிகள், சமூக நலத்துறை உள்ளிட்ட 13 துறைகள் சார்பில் உதவிதொகை, மகளிர் உரிமை தொகை, குடும்ப அட்டை, பட்டா பெயர் மாற்றம், இடம் மாற்றம், ஆதார் கார்டு உள்ளிட்ட 45 சேவைகளுக்கு விண்ணப்பங்கள் பெற்ற பட்டன. கலெக்டர் தங்கவேல் மற்றும் எம்எல்ஏ மாணிக்கம் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை விண்ணப்ப மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
மாற்றுதிறனாளிகள் துறை சார்பில் மாற்று திறனாளி ஒருவருக்கு ஊன்றுகோலினையும் கலெக்டர் தங்கவேல் வழங்கினார். குளித்தலை தாசில்தார் இந்துமதி, நங்கவரம் பேரூராட்சி செயல் அலுவலர் காந்தரூபன், பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி, துணை தலைவர் அன்பழகன், திமுக குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சூரியனூர் சந்திரன், நங்கவரம் பேரூர் கழக செயலாளர் முத்து உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.