கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட கலெக்டர்தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா, மாநகராட்சி ஆணையர் சுதா, அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நடைபெற்ற சிறப்பு முகாமில் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் தனித்தனியாக
அமைக்கப்பட்டுள்ள முகாமில் காந்திகிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த பொதுமக்கள் தங்கள் அடிப்படை பிரச்சனை சம்பந்தமாக கோரிக்கை மனு வழங்கினர். ஒரு சில மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது ஒரு சில மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார்.