கரூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர். சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் ”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்து அனைத்து மாவட்டங்களிலும் காணொளி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இந்த நிலையில் இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தான்தோன்றி மலை அரசு மேல்நிலை பள்ளியில் முகாம் நடைபெற்றது முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் கலந்து கொண்டு 17 மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம் நீர் இழிவு நோய் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டார்.
கரூரில் ஸ்டாலின் மருத்துவ முகாம்… மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கலெக்டர்
- by Authour
