கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்..
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது.
இதில், 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கோடங்கிபட்டி தனியார் மகளிர் கல்லூரியில் போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவில்

வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் இன்று நடைபெற்றன.
இதில் நாட்டுப்புற குழு நடனம், நாடகம், ஓவியம், நாட்டுப்புற பாடல், திருக்குறள் ஒப்புவித்தல், களிமண் சிற்பம் உள்பட மொத்தம் 18 வகையான போட்டிகள் நடைபெற்றன.
இதில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள

து திறமைகளை வெளிபடுத்தினர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வழங்கபடும் கலையரசன், கலையரசி பட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் விருது வழங்க உள்ளார்.
திறமைகளை சிறப்பாக வெளிபடுத்திய சிறந்த மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

