Skip to content

தஞ்சையில் மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகளப் போட்டிகள்

தஞ்சாவூரில் மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகிய ஆகியவை இணைந்து 21 -வது மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் கடந்த 3-ம் தேதி மாலை தொடங்கியது.
38 மாவட்டங்களிலிருந்து பார்வை குறைபாடுடையோர், அறிவு குறைபாடுடையோர், உயரம்

குறைவானர்கள், கை, கால் ஊனமடைந்தவர்கள், காது, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளிகள் சுமார் 700 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு சக்கர நாற்காலிகள் மூலம் 100 மீட்டர், 200, 400, 800, 1,500, 5,000 மீட்டர் ஓட்டம், ரிலே ஓட்டப் போட்டிகள், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் உள்பட 261 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் புள்ளிகளின் அடிப்படையில் 50 பேர் ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை தஞ்சாவூர் மாவட்ட தடகள சங்க தலைவர் டி.கிருஷ்ணசாமி வாண்டையார், தஞ்சாவூர் மாவட்ட பாரா விளையாட்டு சங்க தலைவர் வி.சிவக்குமார், துணைத் தலைவர் எஸ்.கே.முத்துச்செல்வன், செயலாளர் ஜி.செந்தில், பாரா விளையாட்டு பயிற்சியாளர் ரஞ்சித்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் ஆகியோர் வழங்கினர்.

error: Content is protected !!