Skip to content

கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்

இன்றைய தமிழக சட்டசபை கேள்வி நேரத்தின் போது, குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், கும்பகோணத்தில் நவகிரக சுற்றுலா பேருந்து மற்றும் சென்னையில் ‘சென்னை உலா’ சுற்றுலா பேருந்து வசதி ஆகியவை தொடங்கப்பட்டுள்ளது. இது போன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.

error: Content is protected !!