Skip to content

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தெரு நாய்கள் தொல்லை.. அச்சம்

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்: அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம் அதனை தொடர்ந்து இன்று குறைதீர்க்கும் கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

அப்பொழுது தெரு நாய்கள் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் செல்லும் சாலையில் சுற்றி திரிகிறது இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தெரு நாய் தொந்தரவு அதிகரித்து வருகிறது.

தெரு நாய் தொல்லைகள் குறித்த வழக்கில், கல்வி நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சாலைகள் போன்ற பொது இடங்களிலிருந்து தெரு நாய்களைப் பிடித்து காப்பகங்களில்

அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பின்பற்றவில்லை கரூர் மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. தெரு நாய்கள் தொந்தரவாள் பிரதான சாலையில் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வருவதற்கு அச்சத்தில் உள்ளனர் எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!