திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தில்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி. பரமசிவம், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், மாவட்ட துணைச் செயலாளர்கள் பத்மநாதன் , வனிதா பொறுப்பாளர் பெரம்பலூர் அறிவு அரவிந்தன்,
திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு. அம்பிகாபதி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலாஜி, ஐ.டி. பிரிவு வெங்கட் பிரபு, சிறுபான்மை பிரிவு தென்னூர் அப்பாஸ், வழக்கறிஞர் அணி ராஜேந்திரன், தொழிற்சங்கம்
ராஜேந்திரன்,அமைப்புசாரா ஓட்டுனர் அணி,முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர், பகுதி செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ். பூபதி, புத்தூர் ராஜேந்திரன், நாகநாதர் பாண்டி, கலைவாணன், கலிலுல் ரஹ்மான், ரோஜர் , வாசுதேவன்,ஜெயலலிதா பேரவை கருமண்டபம் சுரேந்தர்,இளைஞர் அணி சில்வர் சதீஷ்குமார்,வர்த்தகர் அணி டிபன் கடை கார்த்திகேயன், முன்னாள் மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழரசி சுப்பையா, தொழிற்சங்கம் ஆசைத்தம்பி, தர்கா காஜா, மார்க்கெட் பிரகாஷ், அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா,
புத்தூர் ரமேஷ், ஐ.டி. பிரிவு கதிரவன், நாகராஜன், தில்லை விஸ்வா, பேராசிரியர் தமிழரசன், தென்னூர் மகேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணம். மேற்கொண்ட பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளித்து பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்து திருச்சி மாநகர் மாவட்ட அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க பூத் கமிட்டியின் நிர்வாகிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடத்துவது, திருச்சி மாநகர் மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்துவது திருச்சி மாநகர் மாவட்ட அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றிணைந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியினை மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைத்திட பாடுபட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.