பொங்கல் பண்டிகை முடிந்து, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இன்று வழக்கம் போல் திறக்கப்பட்டது. மாணவர்களும், ஆசிரியர்களும் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை புரிந்தனர். மாணவர்கள், ஆசிரியர்கள் தமிழ் தாய் வாழ்த்துடன் பிரேயர் செய்ய கூடினர். பள்ளி தொடங்கியதையடுத்து பள்ளியின் கேட் மூடப்பட்டது. தாமதமாக

பள்ளிக்கு வந்த மாணவர்கள் வெளியில் நிருந்தப்பட்டனர். மேலும் பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்களும், மாணவர்களுடன் வெளியில் நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து பிரேயர் முடிந்ததும் மாணவர்களும், ஆசிரியர்களும், இனி தாமதமாக பள்ளிக்கு வரக்கூடாது என தலைமை ஆசிரியர் கண்டித்த பின்னர், பள்ளிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய ஆசிரியர்களே, பள்ளிக்கு தாமதமாக வருவது கவலை அளிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

