அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளியில் இடைவளையின் போது பள்ளி மாணவர்கள் விளையாண்டு கொண்டு இருந்தபோது, அலுமினியம் பாஸ்பேட் மாத்திரையை மிட்டாய் என நினைத்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த ஆசிரியர் விசாரித்ததில் தென்னை மரத்திற்கு வண்டு தாக்குதல் இல்லாமல் இருக்க கரைத்து ஸ்பிரே செய்யப்படும் அலுமினியம் பாஸ்பேட் மாத்திரையை என தெரியவந்தது மேலும் விசாரித்த போது ஒன்றாம் வகுப்பு மாணவன் சபரி வாசன் தனது பாட்டி வீட்டில் இருந்து மிட்டாய் என எடுத்து வந்து கொடுத்துள்ளான். இதனை நண்பர்கள் வாயில் போட்டு சப்பும் பொழுது கசந்ததால் துப்பிவிட்டனர்
இதில் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர், 2 ஆம் வகுப்பு 2 பேர், 3 ஆம்வகுப்பு 2 பேர் , ஒன்றாம் வகுப்பு ஒருவர் என 7 மாணவர்கள் ஆவர். இதனையடுத்து ஆசிரியர் 7 சிறுவர்களை திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வந்து முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில் குழந்தைகள் அவரச சிகிச்சை மற்றும் நிலைப்படுத்தல் பிரிவுவில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் 4 மாணவர்களுக்கு மாத்திரை நுரையிரல் வரை சென்று உள்ளதால் மேல் சிகிச்சைக்கு திருச்சி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மாணவர்கள் பெயர்கள் ரித்திக்(10), ஹர்சன்(10),சர்வதேவ் (7 ),சஞ்சய் ( 7) உமேஷ் (07), சஷ்வந்த்( 06), சபரி வாசன் (06) ஆவார்.

