Skip to content

அரசு பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்.. தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

கோவை தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை பள்ளி கழிப்பறை, மாணவிகள் கழிப்பறை, ஆசிரியர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் 5-ம் வகுப்பு மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புகார் அளித்தனர். மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில், மாணவர்களைக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்ய வைத்த புகாரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்திய மாணவா் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆகியவை சார்பில் மாவட்ட கலெக்டர் பவன்குமார், க.கிரியப்பனவரிடம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட மனுவில் கூறியதாவது.. கோவை மாவட்டம், தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவா்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் கடுமையான அநீதிகள் நடைபெற்று வருகின்றன.

தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை பள்ளி கழிப்பறை, மாணவிகள் கழிப்பறை, ஆசிரியர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் 5-ம் வகுப்பு மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். வருகை பதிவேட்டின் வரிசைப்படி தினமும் காலை 2 மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர்.பள்ளியில் மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பறைகள், ஆசிரியா்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் நாள்தோறும் காலை, மாலை என 2 வேளைகளும் இந்த 5 மாணவா்களும் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

மேலும் அந்த மாணவர்கள் மட்டும் தரையில் அமர வைக்கப்பட்டு உள்ளனர். இந்த விஷயத்தை பெற்றோரிடம் தெரிவிக்கக் கூடாது என்றும், அவ்வாறு தெரிவித்தால் மாற்றுச் சான்றிதழை வழங்கி பள்ளியில் இருந்து விரட்டி விடுவேன் என்றும் தலைமை ஆசிரியா் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இத்தகைய தீண்டாமை சார்ந்த செயல்பாடுகள் நடந்து உள்ளதாக எங்களுக்கு தெரிய வருகிறது. இது கல்வி உரிமைகளுக்கு எதிரானது.

error: Content is protected !!