கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் நஞ்சை கவுண்டன்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் மீன்கரை ரோடு எம் கே ஆர் ஆயில் மில், இப்பகுதியில் தென்னை நார் மற்றும் கொப்பரைகள் தரம் பிரிக்கப்பட்டு வெளியூர் களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 40 டன் கொப்பரைகள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது, தகவல் அறிந்து வந்த பொள்ளாச்சி
தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் மேலும் தொடர் மழை பெய்து வருவதால் மின் கசிவு போன்ற வேற எதுவும் காரணங்கள் உள்ளதா என ஆனைமலை காவல் நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 40 டன் கொப்பரைகள் தீ விபத்தில் சேதம் ஆனது மதிப்பு 10 லட்சத்திற்கு மேல் இருக்கும் எனவும் தீயணைப்பு துறை என தெரிவித்தனர் மேலும் அப்பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் எது அசம்பாவிதம் இல்லாமல் தடுக்கப்பட்டது