அரியலூர் மாவட்டம் முழுவதும் கடந்த 15 தினங்களாககத்தரி வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில், மக்கள் மதிய வேளையில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை இருந்தது. இந்நிலையில் இன்று மாலை பலத்த காற்று வீசிய நிலையில் திடீரென பெய்த மழையில் தெருக்களில் தண்ணீர்
பெருக்கெடுத்து ஓடியது. கோடை வெயிலால் தவித்த மக்களுக்கு இந்த மழை வெயிலை தணித்து குளிர்ச்சியை அளித்தது. அரியலூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள வாலஜாநகரம், வி.கைகாட்டி, கீழப்பழூவூர் உள்ளிட்ட பலப்பகுதிகளில் காற்று, இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென பெய்த மிதமான மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
