Skip to content

திடீர் திருப்பம்… மோடி உடன் எப்போதும் நண்பராக இருப்பேன்…. டிரம்ப்

  • by Authour

இந்தியா உடனான உறவை மீட்டெடுக்க தயாரா என்ற கேள்விக்கு, அதிபர் டிரம்ப் அளித்த பதில்: நான் எப்போதும் தயாராக இருப்பேன். பிரதமர் மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான். அவர் ஒரு சிறந்த பிரதமர்.

ஆனால் தற்போது சில தருணங்களில் அவர் செய்வது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் மிகவும் சிறப்பு வாய்ந்த உறவுகளை கொண்டுள்ளன. கவலைப்பட ஒன்றுமில்லை. இந்தியா, ரஷ்யாவில் இரு்து இவ்வளவு எண்ணெய் வாங்கும் என்பதில் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.எப்போதாவது தான் இதுபோன்ற தருணங்கள் வருகின்றன. நான் எப்போதும் மோடியுடன் நன்றாக பழகி வருகிறேன்.என தெரிவித்துள்ளார்.  முன்னதாக இந்தியாவையும் ரஷியாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதங்கம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது .

error: Content is protected !!