தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த படுகை புதுத் தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. விவசாயி. இவரது மகள் ஆர்த்திகா (17) பாபநாசத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வு எழுதி ரிசல்டுக்காக காத்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று மகளை காணாத அவரது பெற்றோர் வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகைக்கு சென்று பார்த்தபோது ஆர்த்திகா துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பின்னர், அவர்கள் ஆர்த்திகாவை பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆர்த்திகா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக பாபநாசம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிளஸ் 2 தேர்வு சரியாக எழுதவில்லை. தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்கொலை செய்த ஆர்த்திகா 600க்கும் 413 மார்க் பெற்று உள்ளார்.
அவர் பெற்ற மதிப்பெண் விவரம் தமிழ் 72, ஆங்கிலம் 48, இயற்பியல் 65, வேதி 78, பாட்ட 70, விலங்கியல் 80
