சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) இன்று பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். அப்போது டைரக்டர் சுந்தர் சிக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுந்தர் சி யின் மனைவி நடிகை குஷ்புவம் கலந்து கொண்டார்.

