சூப்பர்ஸ்டார் ரஜினியின் 170வது படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜூனா, அமீர்கான், ஸ்ருதிஹாசன், உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது. இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. கேரளாவில் காலை 9.30 மணிக்கெல்லாம் சிறப்பாக காட்சி முடிந்து ரசிகர்கள் தியேட்டரில் இருந்து வெளியே வந்தனர். அவர்கள் அனைவரும் படம் சூப்பர் ஹிட் என பாராட்டினர். ரஜினியின் நடிப்பு நன்றாக இருப்பதாகவும், இளமையாக இருக்கிறார் என்றும் கருத்து தெரிவித்தனர். இடைவேளைக்கு பிறகு படம் வேகம் எடுக்கிறது. கடைசிவரை அந்த டெம்போ இருக்கிறது. இசை பிரமாதம் என்றும் , கிளைமாக்ஸ் சூப்பர் என்றும் ரசிகர்கள் கூறினர்.
தஞ்சையில் இன்று 9 தியேட்டர்களில் கூலி திரையிடப்பட்டுள்ளது. விஜயா திரையரங்கில் கூலி படம் வெளியானதை ஒட்டி, ரஜினி ரசிகர்கள் ரஜினி பேனருக்கு பால் அபிஷேகம் செய்து, சூடம் காட்டி, தேங்காய் உடைத்து பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
தஞ்சை விஜயா திரையரங்கம் முன் திரண்ட ரஜினி ரசிகர்கள் ரஜினிகாந்த் வாழ்க என முழக்கம் எழுப்பியவாறு ஊர்வலமாக திரையரங்கம் வந்தனர்.திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த் பிளாக் பேனருக்கு ஒரு ரசிகை பாலாபிஷேகம் செய்தார். தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்
தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி தொடங்கியது. சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்டநகரங்களில் சில தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தமிழ்நாட்டிலும் கூலி திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் தாம்பரம் பகுதியில் பல தியேட்டர்களில் கூலி திரையிடப்பட்டுள்ளது. ரசிர்கள் கூட்டம் காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுவரை வந்த ரஜினி படங்களின் வசூலை கூலி முறியடிக்கும். அந்த அளவுக்கு படம் நன்றாக உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.