அதிமுக எம்.பியும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம், தமிழக அரசின் திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயர் இருக்கிறது. அதை நீக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் முதல்வர் பெயா் வைப்பதற்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிா்த்து, திமுகவும், தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்if விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், வழக்கு தொடர்ந்த சி.வி. சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்ததுடன், அந்த அபராதத்தை ஒருவாரத்தில் செலுத்த வேண்டும். தவறினால் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்தது.
விளம்பரத்துக்காக இதுபோன்ற வழக்குகள் தொடுக்கப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் கண்டித்தது.