டாஸ்மாக் முறைகேடு புகார் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள?… சந்தேகம் இருந்தாலே அரசு அலுவலகத்தில் நுழைந்து ஆவணங்களை எடுத்து செல்வீர்களா ? என உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சிபிஐ கூட சோதனைக்கு முன் சம்பந்தப்பட்ட அரசிடம் தகவல் சொல்கிறது. அதிகாரி தவறு செய்திருந்தால் தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட முறையில் அவரிடம்தான் விசாரணை செய்திருக்க வேண்டும் என அமலாக்கத்துறையிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

