Skip to content

தர்ணாவில் ஈடுபட்ட சஸ்பெண்ட் அதிகாரிக்கு நெஞ்சுவலி- பரபரப்பு

திருப்பத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிர்வாக மேற்பார்வையாளர் தர்ணா ஈடுபட்டபோது நெஞ்சுவலி என கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் செயல்பட்டுவரும் மின்சார வாரிய அலுவலகத்தில் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்த சீனு என்பவரின் மகன் ரமேஷ் (46 ) என்பவர் நிர்வாக மேற்பார்வையாளராக பணிசெய்து வருகிறார்.

அதேபோல் அந்த அலுவலகத்தில் மேற்பார்வையாளர்களாக சதீஷ் மற்றும் பொறியாளர் மேற்பார்வையாளராக ஜெயின் உள்ள புதின் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுவை ஆய்விற்காக பொறியாளர் நிர்வாக மேற்பார்வையாளரான ஜெயின் உல்லா புதின் மற்றும் நிர்வாக மேற்பார்வையாளர் சதீஷ்

ஆகியோருக்கு நிர்வாக மேற்பார்வையாளர் ரமேஷ் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த புகார் மனு மீது இவர்கள் இருவரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு நிர்வாக மேற்பார்வையாளரான ரமேஷ் என்பவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த ரமேஷிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து இன்று திருப்பத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற ரமேஷ் சம்

பந்தப்பட்ட அதிகாரிகளிடம் என் மீது எந்த தவறும் இல்லை எனக்கு பொதுமக்கள் அளித்த மனுவை என்னுடைய மேல் அதிகாரிகளான உங்களுக்கு அனுப்பி வைத்தேன் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது உங்களுடைய தவறு என்னை எதற்காக சஸ்பெண்ட் செய்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அதிகாரிகள் எவ்வித பதிலும் அளிக்காததால் அலுவலகத்திற்கு முன்பாக ரமேஷ் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். தர்ணாவில் ஈடுபட்டிருந்த ரமேஷ் திடீரென நெஞ்சுவலி என கீழே விழுந்து கதறி அழுந்துள்ளார். அதன் பிறகு அவருடைய நண்பரான ஆறுமுகம் என்பவருக்கு போன் செய்து வீட்டில் இருந்த மாத்திரையை எடுத்து வருமாறு கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

error: Content is protected !!