மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, நாடாளுமன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த நிலையில், நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கவும், முடிவெடுக்கவும் அமைச்சரவை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கும் நடப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் புதியதாக தொழில் தொடங்க விண்ணப்பித்திருக்கும் நிறுவனங்களுக்கான ஒப்புதலும் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் கொள்கை ரீதியலான பல்வேறு முடிவுகளும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

