கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, கட்சிகள் மேற்கொள்ளும் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியது.
இந்நிலையில் பொதுக்கூட்டங்கள், பிரசார கூட்டங்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா. சுப்பிரமணியன், ரகுபதி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ஜ.க., த.வா.க., ம.நீ.ம., ம.ம.க., ஐ.யூ.எம்.எல். ஆம் ஆத்மி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 20 கட்சிகள் பங்கேற்றுள்ளன. இதனை தொடர்ந்து பொதுக்கூட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி. பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அபராதம் வசூலிக்கப்படும். மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூட்டத்தில் காவலர்களை பயன்படுத்த திட்டம். பொதுக் கூட்டங்களை கண்காணிக்க , அனுமதி வழங்க குழு அமைக்கப்படும். ரோடு ஷோ நடத்தக்கூடாது, தடை செய்ய வேண்டும் என சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

