சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50″ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த சிறப்பு விழா, செப்டம்பர் 13-ந்தேதி(இன்று) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, இளையராஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்க உள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்துகிறார். மேலும், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி., நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை உலக பிரபலங்கள் விழாவில் பங்கேற்று இசைஞானி இளையராஜாவை வாழ்த்தி உரையாற்ற உள்ளனர். 50 ஆண்டுகளாக தமிழ் இசைத்துறையில் முக்கிய பங்களிப்பை வழங்கி, ஒட்டுமொத்த தமிழர் உலகமே கொண்டாடும் இசையமைப்பாளராக விளங்கும் இளையராஜாவுக்கு, தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் இந்த கவுரவம் தமிழ் இசைத்துறை வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.