பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதம் குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவம்பர் 18-ந்தேதி (நாளை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளை தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் பணிகளை புறக்கணித்து நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வருவாய்துறை ஊழியர்களும் அறிவித்து இருந்த நிலையில், தமிழக அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

