அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை உள்ளிட்ட முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த விழா மேடையில் ஆளுநர், மத்திய- மாநில அமைச்சர்கள் மற்றும் பாஜக மாநில தலைவர் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் தனது முகநூல் பக்கத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை பதிவிட்டு பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் மாநில அரசின் சார்பில் கலந்து கொண்ட 2 அமைச்சர்களின் பெயரையும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு பேசவில்லை எனவும், விழா நடைபெற்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனது பெயர் விழா அழைப்பிதழ் இடம் பெறவில்லை. தொகுதிக்கு தொடர்பே இல்லாத, பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பெயர் இடம்பெற்று இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே சமயம் தூத்துக்குடியில் பிரதமர் பங்கேற்ற விழா அழைப்பிதழ் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகம் பெயர் இடம் பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும் விழா அழைப்பிதழ் நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று காலை 8:30 மணிக்கு தான் தனக்கு கொடுக்கப்பட்டதாகவும், தான் அமர வைக்கப்பட்ட இடம் 7 வது வரிசை என்றும் மாவட்டத்தின் மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான சின்னப்பா அமர வைக்கப்பட்ட இடம் 8 வது வரிசை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தங்களுக்கு முன்னதாக தொகுதிக்கும், மாவட்டத்திற்கும் துளியில் தொடர்பே இல்லாத பாஜக மற்றும் அதிமுகவினர் அமர வைக்கப்பட்டுள்ளதையும் வேதனயுடன் பதிவு எழுதியுள்ளார்.
பிரதமரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாகன அனுமதி சீட்டு காலை 10:30 மணிக்கு வழங்கப்பட்டதாகவும், அதன் பின்னரே விழாவிற்கு தன்னால் செல்ல முடிந்ததாகவும், செல்லும் வழியில் பல சிரமங்களை சந்தித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிலும் குறிப்பாக விழா அழைப்பிதழ் தனக்கு கிடைக்கப்பெறவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் முதல் நாள் இரவு குறுந்தகவல் மூலமாக தெரிவித்த பின்னர், வட்ட அளவிலான ஒரு மூன்றாம் தர அரசு அலுவலர் மூலமாக ஆட்சியர் தனக்கு அழைப்பில் கொடுத்ததாகவும் மனக்குமுறலுடன் பதிவு எழுதியுள்ளார்.
எந்த அடிப்படையில் எனக்கு அழைப்பிதழ் வழங்கினார்கள் என்று அந்த மூன்றாம் தர அலுவலர்களிடம் கேட்டபோது நீங்கள் சட்டமன்ற உறுப்பினர் என்றெல்லாம் கொடுக்கவில்லை கலெக்டர் உங்களிடம் கொடுக்க சொன்னார் என்று மட்டும் கூறினார். அந்த அழைப்பிதழ் எனது பெயர் கூட எழுதப்படவில்லை. இதே அழைப்புகள் கடந்த மூன்று நாட்களாக பாஜகவினரால் வீதி வீதியாக எல்லோரிடமும் கொடுக்கப்பட்டது.
பாஜக, அதிமுக, பாமக, அமமுக ஏன் வீசிக்காவினருக்கு கூட 20 கார் பாசுகள் மற்றும் 90 அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதைவிட கொடுமை எங்களுக்கு முன்பாக மாநில அரசின் ஒன்றிய வட்டார நகர அலுவலக அளவிலான அலுவலர்கள் அமர்ந்திருந்ததை பார்த்ததும் இந்த நிகழ்ச்சிக்கு ஏன் சென்றோம் என தோன்றியது.
கடந்த 2016 இல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்பும்போது திமுக தலைவர் ஸ்டாலின் எப்படி பின் வரிசையில் அமைந்து வைக்கப்பட்டாரோ அதேபோன்ற ஒரு சூழலை நாங்களும் நேற்று உணர்ந்தோம்.
அதேசமயம் பிரதமர் தங்கள் மண்ணிற்கு வருகை தர உள்ளார் என்ற எண்ணத்தோடு அந்த விழாவில் கலந்து கொண்டோம். விருத்தாசலம் ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் ரயில் பாதை குறித்த எந்த அறிவிப்பும் பிரதமர் முறையில் இல்லை. நாணயம் வெளியிட்டது ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம் என பதிவிட்டு குமரலுடன் பதிவு ஒன்றை நேற்று இரவு எழுதியுள்ளார் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன்.
தனது தொகுதியில் நடைபெறும் விழாவில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் தங்களுக்கு வாகன அனுமதி சீட்டு மற்றும் விழாவில் பங்கேற்க அரங்கினுள் செல்வதற்கான அனுமதிச்சீட்டு ஆகியவை வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டி முகநூலில் பதிவு எழுதியிருக்கும் அதே வேளையில்…
பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பிரதமர் மோடியை வரவேற்று வைத்திருந்த கொடி கம்பங்களுக்கு இடையே, விசிக கொடிகள் நடப்பட்டதும் – விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் விழாவில் பங்கேற்க வாகன அனுமதிச்சீட்டு மற்றும் நிகழ்ச்சி அரங்கினுள் செல்வதற்கான அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டிருப்பது அதிமுக-பாஜக கூட்டணியை நோக்கி விசிக நெருங்குகிறதா? எனும் கேள்வியையும் மறைமுகமாக திமுக சட்டமன்ற உறுப்பினரின் பதிவு எழுப்புகிறது.