Skip to content

ஒன்றிய அரசுக்குத்தான் தமிழ்நாடு, புதுவை தனித்தனி.. விஜய் பேச்சு

கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று செவ்வாய்க்கிழமை புதுச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். இதற்காக கடும் நிபந்தனைகளுடன் உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. QR குறியீடு கொண்ட நுழைவுச்சீட்டு இருந்தால் தான் அனுமதி அளிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் 5 ஆயிரம் பேருக்கு மட்டும பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று காவல்துறை கண்டிப்புடன் கூறியுள்ளது.

விஜய் அதி நவீன சொகுசுப் பேருந்தில், மக்கள் சந்திப்பு பயணம் சென்றார். அவரது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கடும் கூட்டம் கூடியதால் பல இடங்களில் தள்ளுமுள்ளு, தொண்டர்களுக்கு பாதிப்பு போன்ற நிகழ்வுகள் அரங்கேறின. இதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் 27-இல் கரூரில் விஜய்

பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பெரும் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வுக்குப்பிறகு, விஜய் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தவில்லை. அதே நேரத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் இருக்க ரோடு ஷோக்கள் நடத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் புதுச்சேரியில் தவெக கடும் நிபந்தனைகளுடன் பொதுக்கூட்டம் நடத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியது. தவெக சார்பில் புதுச்சேரியைச் சேர்ந்த 5 ஆயிரம் தொண்டர்களுக்கு கியூஆர் குறியீடுடன் அனுமதி அட்டைகள் வழங்கி அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ரங்கசாமி, விஜய் பட பேனருடன் தவெக தொண்டர்கள் குவிந்தனர். இதனை தொடர்ந்து புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் இன்று விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

மக்களை நோக்கி கையசைத்தபடி பேச்சை தொடங்கிய தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது…

என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மக்களுக்கு வணக்கம் ..வணக்கம்.. எல்லாரும் எப்டி இருக்கீங்க… தமிழ்நாடும், புதுச்சேரியும் வேறு வேறல்ல. ஒன்றுதான். வேறு வேறு மாநிலத்தில் இருந்தாலும் நாம் சொந்தங்கள்தான். புதுச்சேரி முதல்வருக்கு நன்றி. புதுவை அரசைப் பார்த்து திமுக அரசு கற்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் முன்பே புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்தவர் எம்ஜிஆர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழக மதக்கள் திமுகவை நம்பவேண்டாம். வரவிருக்கும் தேர்தல் தமிழக அரசுக்கு பாடம் கற்பிக்கும். புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் ஒன்றிய அரசு எதுவும் கண்டுக்கொள்ளவில்லை. சிறுபான்மையினரை அவமானப்படுத்தும் புதுவை அரசு. புதுவையின் கோரிக்கைகள் புறக்கணிப்பு. மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் போட்டு அனுப்பியும் ஒன்றிய அரசு கண்டுக்கொள்ளவில்லை. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். தமிழ்நாட்டைப்போல் புதுச்சேரியையும் ஒதுக்காதீர். புதுச்சேரியில் நடைபெறும் ஆட்சியைப் பார்த்து நம் தமிழக முதல்வர் கற்றுக்கொள்ள வேண்டும். புதுச்சேரியில் ஒரு ஐடி நிறுவனம் உருவாக வேண்டும் என்ற எண்ணமே அ வர்களுக்கு தோன்றவில்லை. புதுச்சேரி பிரச்சினைக்களுக்கான ஒரே தீர்வு. இந்திய அளவில் ரேசன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரி. புதுச்சேரியில் தொழில்களை வளர்த்தெடுக்க நடவடிக்கை வேண்டும். 1974ல் நமக்காக வந்தவர் எம்ஜிஆர் . அவரை மிஸ் செய்ய வேண்டாம் என அலர்ட் கொடுத்தது புதுச்சேரி. புதுவையில் தவெக கொடி பறக்கும். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்று இவ்வாறு பேசினார்.

error: Content is protected !!