மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் தனியார் பள்ளி முன்பு முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சி காரைக்கால் மாவட்ட பொறுப்பாளர் மணிமாறன் என்பவர் காரில் சென்ற போது கொடூரமான முறையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் உட்கட்சி தேர்தலுக்கான மயிலாடுதுறை நாகப்பட்டினம் காரைக்கால் மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுக்கான விருப்பமனு பெரும் கூட்டத்தில்
காரைக்கால் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் ஏற்கனவே மாவட்ட பொறுப்பு வகித்த, காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு மெயின் ரோட்டை சேர்ந்த மணிமாறன் (32) என்பவர் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் காரைக்கால் புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது மயிலாடுதுறை தரங்கம்பாடி மெயின் ரோட்டில் செம்பனார்கோவிலில் காளஹஸ்திநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளி வேகத்தடை ஏறி இறங்கும் பொழுது மணிமாறன் சென்ற காரினை இரண்டு கார்களில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் வழிமறித்து நிறுத்தியுள்ளனர். இதையடுத்து காரில் இருந்து கார் கண்ணாடியை உடைத்து அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய கும்பல் கொடூர ஆயுதங்களால் அவரை முகத்தில் பல இடங்களில் வெட்டி சிதைத்து கொலை செய்துள்ளனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராக இருந்த தேவமணி கொலை வழக்கில் மணிமாறன் முதலாவது குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் முன்விரோதம் காரணமாக இக்கொலை நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.