Skip to content

தமிழன் பிரதமராக வேண்டும்…… மநீம பொதுக்குழுவில் கமல் பேச்சு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அவர் பேசியதாவது:அன்றாடம் உடல் நலம் பேணுவது போல ஜனநாயகம் பேண வேண்டும். காக்கவேண்டும். இந்தியாவிலேயே நேர்மையானவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.  இந்த நாட்டை வழி நடத்துவது நமதுவரிப் பணம்.  அவனுக்கு அள்ளி அள்ளி கொடுத்து விட்டு  இங்கு உள்ளவன பட்டினி போடக்கூடாது.  மாநிலங்களுக்கு நியாயமான நிதி பகிர்வு வேண்டும்.

தெலுங்கு காரர் இங்கு முதல்வராக இருக்கிறார்.  தெலுங்கு காரர் மேற்கு வங்கத்தில் முதல்வராக இருந்திருக்கிறார். ஆனால் ஒரு தமிழன் பிரதமராக முடியுமா அதற்கு இந்த நாட்டை தயார் படுத்த வேண்டும். தமிழன் ஏன்  பிரதமர் ஆக கூடாது பிரதமர் ஆக முடியுமா? என நான் 20 வருடத்திற்கு முன்பே கேட்டேன்.  அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு சர்ச்சையானது.  ஒரே நாடு, ஒரே தேர்தல் தேவையில்லாதது. அதில் ஒருவர் நாமம் தான் பேசப்படும்.

நான் எனக்காக அரசியலுக்கு வரவில்லை. நமக்காக வரவில்லை. நாளைக்காக வந்திருக்கிறேன்.  நான் விதை போடுவேன். இன்னொருவர் சாப்பிடுவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!