தமிழர் தேசம் கட்சி மாநில நிர்வாகக் குழு கூட்டம் கரூரில் நடந்தது. கட்சி நிறுவனத் தலைவர் செல்வக்குமார் தலைமைதாங்கினார்.கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பிப்ரவரி மாதம் திருச்சி மாவட்டத்தில் முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாடு நடத்துவது என முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாநில பொதுச் செயலாளர் தளவாய் ரமேஷ், மாநில அமைப்பு செயலாளர் மகுடேஸ்வரன், மாவட்ட செயலாளர் அருள், மாவட்ட இணைச்செயலாளர் சீரங்கன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், மாநகர் செயலாளர் ரகுநாதன், கிருஷ்ணாபுரம் ஒன்றிய செயலாளர் பிரசாந்த், கடவூர் ஒன்றிய செயலாளர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.