Skip to content

தமிழ்மொழி, இலக்கியத்தைக் காக்கும் தமிழறிஞர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கிய கலெக்டர்….

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்மொழி, இலக்கியத்தைக் காக்கும் போராட்டங்களில் தனது சான்றாண்மையை வெளிப்படுத்தும் வகையில், சிறைசென்று வந்த 07 தமிழறிஞர்களுக்கு தலா ரூ.10,000 என மொத்தம் ரூ.70,000 மதிப்பில் காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்.

தொடர்ந்து, தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் 2023-24 ஆண்டு குறள் பரிசு பெற்ற விழுப்பணங்குறிச்சி அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி மாணவி ப.நித்திய ஸ்ரீ என்பவருக்கு ரூ.15,000 மதிப்பில் காசோலைகளையும் வழங்கினார்.

மேலும், அரியலூர் மாவட்டத்தில் 2021-ஆம் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உதவி இயக்குநர், மாநில அரசு தணிக்கைத் துறை- அரியலூர் அலுவலகத்திற்கு கேடயத்தினையும் வழங்கினார்.

பின்னர், தமிழ் வளர்;ச்சித் துறையின் சார்பில் கடந்த 09.01.2024 அன்று சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மாணவி பா.பிரியநிஹாசினி, இரண்டாம் பரிசு ரூ.7,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மாணவன் ச.சரண், மூன்றாம் பரிசு ரூ.5,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மாணவி சு.அபிராமி, கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மாணவி சு.ஜெயஸ்ரீ, இரண்டாம் பரிசு ரூ.7,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மாணவன் ரா.விஸ்வா, மூன்றாம் பரிசு ரூ.5,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மாணவி செ.தர்ஷிணி, பேச்சுப்போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மாணவி சு.கவிபாரதி, இரண்டாம் பரிசு ரூ.7,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மாணவி செ.சுவாதி, மூன்றாம் பரிசு ரூ.5,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் செ.நவின்குமார் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்.

இதேபோன்று பின்னர், தமிழ் வளர்;ச்சித் துறையின் சார்பில் கடந்த 10.01.2024 அன்று சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மாணவி ச.சத்யா, இரண்டாம் பரிசு ரூ.7,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மாணவி சே.ரேணுகா, மூன்றாம் பரிசு ரூ.5,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மாணவன் அ.அஷோக்கா, கட்டுரைப்

போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மாணவி சு.சுவேதா, இரண்டாம் பரிசு ரூ.7,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மாணவன் தெ.கங்கா, மூன்றாம் பரிசு ரூ.5,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மாணவி இரா.லூர்து மேரி, பேச்சுப்போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மாணவி பெ.ஜான்சிராணி, இரண்டாம் பரிசு ரூ.7,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மாணவி செ.செந்தமிழ்செல்வி, மூன்றாம் பரிசு ரூ.5,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மாணவன் பா.ஹரிஹரன் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லெட்சுமணன். தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!