தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.S.அழகிரி இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைமை அலுவலகம் வருகைத்தந்தார். தனது புதல்வியின் திருமண அழைப்பிதழை நமது பொதுச்செயலாளர் . ஆ.அருணாச்சலம் அவர்களிடம் அளித்தார். காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரியுடன் , காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் மற்றும் ஊடகத் துறை தலைவர் கோபண்ணா , காங்கிரஸ்
துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி வருகை தந்தனர். அழைப்பிதழை பொதுச்செயலாளர் பெற்றுக்கொள்ளும்போது கட்சியின் மாநில செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. சிவ இளங்கோ, முரளி அப்பாஸ் உடனிருந்தனர். வருகை தந்த K.S.அழகிரியுடன், மநீம தலைவர் கமல்ஹாசன் வெளிநாட்டிலிருந்து அலைபேசியில் உரையாடினார்.