கவர்னர் ஆர்.என்.ரவியின் பொங்கல் அழைப்பிதழில் தமிழக கவர்னர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு முத்திரையின்றி மத்திய அரசின் முத்திரை மட்டும் இடம்பெற்றது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு சர்ச்சை குறித்து டி.ஆர்.பாலு, அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட திமுகவினர் ஜனாதிபதியை சந்தித்து கவர்னருக்கு எதிரான புகாரை வழங்கினர். இதனையடுத்து, கவர்னர் ஆர்.என்.ரவி டில்லி சென்று வந்த பிறகு தமிழ்நாடு பெயர் சர்ச்சை குறித்து விளக்கமளித்திருந்தார். இந்நிலையில். வரும் 26-ம் தேதி நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவிற்கு தமிழ்நாடு கவர்னர் மாளிகையின் வரவேற்பு அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு முத்திரையுடன் தமிழ்நாடு கவர்னர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கவர்னரின் குடியரசு தின அழைப்பிதழில் தமிழ்நாடு பெயருடன், அரசு முத்திரையும் இடம்பெற்றது
- by Authour

Tags:தமிழ்நாடு