Skip to content

தஞ்சை அருகே….இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்

  • by Authour

தஞ்சாவூர் அருகே நரசநாயகபுரம் கிராமத்தில் மேலத் தெருவில் உள்ள தொகுப்பு வீடுகளில் இரண்டு வீடுகளில் மேற்கூரை நேற்று இரவு இடிந்து விழுந்தது. மேலும் இப்பொழுது உள்ள பத்து  வீடுகள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளன.

பெங்கல் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில்  ,நரசநாயகபுரம்  தொகுப்பு வீடுகளில்,    மதிவாணன் (58) என்பவரது வீடும் , பூமதி w/o வரதராஜன் (54) என்பவரது  வீடும், தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வீட்டினுள் மேற்கூரை  காரை  பொல பொல வென விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எவ்வித காயம் ஏற்படவில்லை .
இங்கு  பத்து தொகுப்பு வீடுகள் மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இந்த வீடுகளில் வசிப்பவர்கள் தங்களை வேறு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!