Skip to content

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

  • by Authour
தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவு கொடியேற்றத்துடன்  இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். தொடர்ந்து 40 அடி உயர கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க விழா 100 அடி நீள கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக, கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர். சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் அடுத்த (மே) மாதம்  7 தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெறுகிறது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர். 18 நாட்களும் ஒவ்வொரு சுவாமிகளும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடைபெறும் வருகின்ற 10ஆம் தேதி தீர்த்தவாரி மற்றும் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
error: Content is protected !!